Siragadikka Aasai: மீண்டும் முத்துவை சீண்டும் விஜய்... மீனாவிடம் சிக்கிய க்ரிஷின் பாட்டி
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவை சீதாவின் கணவர் விஜய் மீண்டும் மீண்டும் சீண்டிக்கொண்டு வருகின்றார். தற்போது முத்துவின் நண்பரை வைத்து பஞ்சாயத்தை ஏற்படுத்துகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் அதிகமாக விரும்பி பார்க்கும் சீரியலாகும். முத்து மீனா இருவரை வைத்து எதார்த்தமான வாழ்க்கையை கதையாக எடுத்துள்ளனர்.
ரோகினி வீட்டில் பல உண்மைகளை மறைத்து வைத்துள்ள நிலையில், சில வெளியாகி பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், க்ரிஷ் ரோகினியின் மகன் என்ற உண்மை வெளிவராமல் உள்ளது.
க்ரிஷ் அம்மா ரோகினியிடம் இருக்க வேண்டும் என்பதற்காக அவனது பாட்டி மருத்துவமனையிலிருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறியுள்ளார்.
ஏற்கனவே ஒருமுறை விஜயா கண்ணில் பட்ட க்ரிஷ் பாட்டி தற்போது மீனாவின் கண்ணிலும் பட்டுள்ளார். மீனாவிடம் க்ரிஷ் அவனது அம்மாவுடன் செல்ல வேண்டும் என்பதற்காக மருத்துவமனையிலிருந்து சென்றதாக கூறியுள்ளார்.
மேலும் உங்களிடம் அதிகமான உண்மையை மறைத்துவிட்டேன் மன்னித்துவிடுங்கள் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் சீதாவின் கணவர் விஜய் முத்துவை வம்பிழுத்து வருகின்றார்.
தற்போது முத்து மீதுள்ள கோபத்தினை அவனது நண்பனிடம் காட்டி, வண்டியையும் பறித்து வைத்து மரியாதை இல்லாமல் பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |