Siragadikka Aasai: தலையில் காயத்துடன் மீனா... பதற்றத்தில் விஜயா கேட்ட கேள்வி
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா தலையில் அடிபட்டு காயத்துடன் வந்த நிலையில், விஜயா அதிர்ச்சியில் பாசத்துடன் நடந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நண்பன் வீட்டு விசேஷத்தில் முத்துவிற்கு அவமானம் ஏற்பட்ட நிலையில், அங்கும் அடிவாங்கவும் செய்தார். பின்பு மீனா அவரது அம்மா வீட்டிற்கு சென்ற நிலையில், தம்பி சத்யாவின் போக்கு சரியில்லை என்று கேள்விப்படுகின்றார்.
உடனே சிட்டியிடம் போய் சண்டையிடுகின்றார். சிட்டியும் மரியாதை இல்லாமல் பேசி மீனாவை கீழே தள்ளிவிடுகின்றார். இத்தருணத்தில் முத்து வந்து மீனாவை காப்பாற்றி சிட்டிக்கு பாடம் கற்பிக்கின்றார்.
தலையில் அடிபட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தலையில் கட்டு போட்டு மீனாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அப்பொழுது விஜயா மீனாவைப் பார்த்து பாசமாக பேசியுள்ளது குறித்த சீரியலின் ரசிகர்களுக்கு சற்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |