கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர்
கழுத்தில் தாலி ஏறியவுடன் மொத்தமாக மாறிய சீதா, மீனாவை நகைக்கும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கோமதி பிரியா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை கோமதி பிரியா.
இவர் மற்ற நடிகைகள் போல் அல்லாமல் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். குடும்பத்தில் மூன்று மருமகள்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்குள் நடக்கும் சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் எப்படி நடக்கிறது என்பதனை கருவாகக் கொண்டே சீரியல் அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறது.
இந்த சீரியலில் நாயகியாக இருக்கும் மீனா, குடும்பத்தை எப்படி சமாளித்து வைத்துக் கொள்கிறார் என்பதனை அழகாக சீரியலில் காட்டி வருகிறார்கள்.
கழுத்தில் தாலியுடன் சீதா அலப்பறை
இந்த நிலையில், சீரியலை போன்று சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கோமதி ப்ரியா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வார்.
அந்த வகையில், சீதா திருமணத்தில் முத்து போட்ட குழப்பத்தினால் திருமணம் இனி நடக்குமா? என்ற பரபரப்பில் கதைக்களம் சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த சமயம், கழுத்தில் தாலியுடன் சீதா- மீனா இருவரும் செய்த சேட்டையை காணொளியாக பகிர்ந்துள்ளார். இந்த காணொளியை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள்,“தங்கை காதலுக்காக சென்ற மீனாவின் வாழ்க்கை இப்படியா ஆகிருச்சே..” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |