ரோகினியின் நாடகத்தினால் மனோஜிற்கு ஏற்பட்ட துயரம்! விஜயா என்ன சொல்லப்போகின்றார்?
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் திட்டத்தினால் மனோஜ் பரிதாபநிலைக்கு சென்றுள்ள காட்சி நாளைய ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் பள்ளி நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக சென்றுள்ளார்.
ஆனால் அப்பள்ளி க்ரிஷ் படிக்கும் பள்ளி என்பதால் ரோகினி நாடகமாடி அவரை போகவிடாமல் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரக்கூறியுள்ளார்.
வீட்டிற்கு வரும் வழியில் மனோஜை நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் மருத்துவர் நாய் இறந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்... இல்லையென்றால் இவருக்கு ஆபத்து என்று கூறியுள்ளார்.
தற்போது வெளியான நாளைய ப்ரொமோ காட்சியில் மனோஜ் நாயைக் குறித்து அதன் உரிமையாளரிடம் விசாரித்து பார்த்த போது நாய் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
உடனே தனக்கு நாய் போன்று தான் மாறுவதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். இதனால் ரோகினி குறித்து உண்மை விஜயாவிற்கு தெரியவருமா என்ற கேள்வியும் எழுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |