முகேஷ் அம்பானி குடும்பத்தினர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள்? கோடிகளில் மாத வருமானம்
இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார குடும்பமாக பார்க்கப்படும் அம்பானி குடும்பத்தினர், மாதம் பெறும் சம்பள விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
உலகின் உள்ள பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் அம்பானியின் நிகர மதிப்பு ரூ. 8.45 லட்சம் கோடி (அல்லது 101 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய தொகைக்கு முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி மற்றும் அனந்த் அம்பானி ஆகியோர் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி, குடும்பத்திற்கு அதிகமான வருமானத்தை கொண்டு வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
ஆனந்த் அம்பானி
இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பின்படி, அனந்த் இப்போது ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 முதல் 20 கோடி வரை சம்பளம் பெறுகிறார். அத்துடன் நிறுவனத்தின் லாபத்தில் ஒரு பங்கு உட்பட பல கூடுதல் சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன.
[
கடந்த 2023 ஆம் ஆண்டில், முகேஷ் அம்பானியின் மூன்று குழந்தைகளான ஆகாஷ், இஷா மற்றும் அனந்த் ஆகியோர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாகமற்ற இயக்குநர்களாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் சிட்டிங் கட்டணமாக ரூ.4 லட்சம் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் 2023–24 ஆம் ஆண்டிற்கு ரூ.97 லட்சம் லாப கமிஷனும் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது 30 வயதாகும் அனந்த் நிர்வாக இயக்குநராகிவிட்டதால் நிறுவனத்தில் இருந்து தன்னுடைய புதிய வேலைக்காக வருமானத்தில் ஒரு பகுதியை முழு சம்பளமாக பெறுகிறார். அத்துடன் போனஸ், பிற சலுகைகள் கொடுக்கப்படுகின்றன.
இஷா அம்பானி சம்பளம்
இஷா அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் ஒரு நிர்வாகமற்ற இயக்குநராக பணியாற்றுகிறார். இவர் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL) இல் நிர்வாக இயக்குநராகவும் இருந்து வருகிறார்.
ET ஹிந்தி அறிக்கையின்படி, இஷா அம்பானிக்கு மாதம் மாதம் சுமார் ரூ.35 லட்சம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இந்த வருடத்தில் இதுவரையில் சுமார் ரூ.4.2 கோடி வரை சம்பாதிக்கிறார். இந்த தொகையில் போனஸ்கள் அல்லது ஈவுத்தொகைகள் சேர்க்கப்படவில்லை.
நீதா அம்பானியின் சம்பளம்
முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராகவும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாரியத்தில் நிர்வாகமற்ற இயக்குநராக இருக்கும் நீதா அம்பானிக்கு லாபத்தின் அடிப்படையில் அமர்வு கட்டணம் மற்றும் கமிஷன் பிரிக்கப்படுகிறது.
கடந்த 2022–23 ஆம் ஆண்டில், அவர் அமர்வு கட்டணமாக ரூ.6 லட்சமும், கமிஷனாக ரூ.2 கோடியும் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்னர் 2020–21 ஆம் ஆண்டில் அமர்வு கட்டணமாக ரூ.8 லட்சமும், கமிஷனாக ரூ.1.65 கோடியும் பெற்றார்.
முகேஷ் அம்பானியின் சம்பளம்
ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவராக கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்து வருகிறார். ஆனால் சம்பளமாக எந்த தொகையும் வாங்கவில்லை. கடந்த 2008 முதல் 2020 வரை ஆண்டுக்கு ரூ.15 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றார்.
கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பின்னர், நிறுவனத்தின் வருவாய் முழுமையாக மீண்டு வரும் வரை சம்பளம் வாங்குவதில்லை என்ற முடிவில் இருக்கிறார்.
ஆகாஷ் அம்பானியின் சம்பளம்
முகேஷ் அம்பானி குடும்பத்தில் மூத்த வாரிசாக இருக்கும் ஆகாஷ் அம்பானி, ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட்டில் இயக்குநராக பணியாற்றுகிறார். இவருக்கு ஆண்டுக்கு ரூ.5.6 கோடி கொடுக்கப்படுகிறது. ஆனாலும் இவரின் சம்பள விவரங்கள் பெரியளவு வெளியில் பகிரப்படவில்லை. ஆகாஷ் அம்பானியின் நிகர மதிப்பு சுமார் $40.1 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |