Siragadikka Aasai: குடிபோதையில் போலிசாரிடம் மனோஜ் செய்த காரியம்! முத்துவிற்கு ஏற்படும் சிக்கல்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி மனோஜை ஏமாற்றிவிட்டதால் மன வருத்தத்தில் மனோஜ் குடித்துவிட்டு போலிசாரிடம் ரகளை செய்து வருகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் நடந்த உண்மையை மறைந்து வாழ்ந்து வரும் நிலையில், அதில் மலேசியா மாமா குறித்த உண்மை மட்டும் தற்போது அம்பலமாகியுள்ளது.
மீனா வீட்டில் என்னதான் மாமியாரால் கொடுமை அனுபவித்தாலும், சிறந்த மருமகளாக அனைவரையும் அனுசரித்து செல்கின்றார்.
மலேசியாவைச் சேர்ந்தவர் இல்லை என்பதை அறிந்த விஜயா ரோகினியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளியுள்ளார். இந்நிலையில் அண்ணாமலை ரோகினியின் நியாயத்தை கேட்குமாறு மனோஜை கூறியுள்ளனர்.
ஆனால் மனோஜ் விஜயாவின் பேச்சைக் கேட்டு செல்ல மறுக்கின்றார். மாறாக ரோகினி ஏமாற்றியதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மதுவருந்திவிட்டு போலிசாரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
மனோஜ் செய்த தவறால் ஏற்கனவே ட்ராபிக் போலிசிடம் மோதல் இருந்துள்ள முத்துவிற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |