ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம்... சந்தேகத்தில் முத்து, மீனா
சிறகடிக்க ஆசை சீரியலில் க்ரிஷ் ரோகினியின் நடிப்பினைப் பார்த்த மீனாவிற்கு தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் தமிழ் சின்னத்திரையில் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகின்றது. அடுத்தடுத்து ரோகினி வசமாக சிக்கிவரும் நிலையில் தற்போது மகனை வீட்டிலேயே வைத்துள்ளார்.
ஆம் ரோகினியின் அம்மா விபத்தில் சிக்கியுள்ள நிலையில், க்ரிஷ் மீனாவுடன் வீட்டிற்கு வந்துள்ளார். அம்மாவும் அதே வீட்டில் இருப்பதால் மகிழ்ச்சியில் காணப்படுகின்றான் க்ரிஷ்.
இந்நிலையில் ரோகினி க்ரிஷை தனது அறைக்கு வரவிடாமல் கோபத்தில் அடித்துள்ளார். இதனை மீனா அவதானித்து முத்துவிடம் கூறி சண்டையிட்டுள்ளனர்.
இன்றைய எபிசோட்
ஆனால் க்ரிஷிடம் முத்து விசாரித்த போது ரோகினி தன்னை அடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
க்ரிஷ் இவ்வாறு கூறியதைக் கேட்ட மீனா சற்று சந்தேகம் அடைகின்றார். மேலும் க்ரிஷ் கூறுவதற்கும், ரோகினி கூறியதற்கும் வித்தியாசம் காணப்படுகின்றது.
இதனால் மீனா மேலும் சந்தேகம் அடைந்து, யோசனை செய்து வருகின்றார். தற்போது க்ரிஷ் மற்றும் ரோகினி மீது மீனாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், ரோகினியின் உண்மை அம்பலமாகுமா என்ற கேள்வியும் பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
