சிறகடிக்க ஆசை கோமதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?
சிறகடிக்க ஆசை கோமதியின் வாழ்க்கையில் நடந்த சோகங்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபர தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை கோமதி பிரியா.
இவர் அவருடைய வாழ்க்கையில் ஆரம்ப காலங்களில் அனுபவித்த சோகங்கள் பற்றிய சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது, சீரியலை போல் நிஜ வாழ்க்கையிலும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர் கோமதி பிரியா. இவரின் வாழ்க்கையும் ஆரம்பத்தில் வழக்கமானதாக இருந்துள்ளது. மதுரையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தான் கோமதி பிரியா படித்திருக்கிறார்.
அவருடைய அப்பா நிறுவனமொன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். அங்கிருந்து வந்த கொஞ்ச பணத்தில் வீடு ஒன்றை கட்டியுள்ளார். சிறிது நாட்கள் சென்றதும் அவருக்கு ஹோட்டல் பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.
வருமானம் போதாமல் இருந்தது..
ஆனால் வியாபாரம் ஆரம்பித்து சிறிது நாட்களுக்கு பின்னர் நினைத்த அளவு வருமானம் இல்லாமல் போயுள்ளது. கடனும் ஒரு பக்கம் அதிகரித்து விட்டதாம். இதனால் ஆசையாக கட்டிய வீட்டையும் கோமதி பிரியா அம்மா வைத்திருந்த நகையும் விற்று கடன்களை அடைத்துள்ளார்.
அந்த சமயத்தில் பள்ளி படிப்பை முடித்த கோமதி பிரியா கல்லூரி படிப்பிற்காக ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தார். இவரின் படிப்பிற்கு போதியளவு பணம் இல்லாவிட்டாலும் அங்காங்கு உதவி வாங்கி படித்துள்ளார்.
படித்து கொண்டிருக்கும் போது பகுதி நேர வேலையாக சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். இது காலப்போக்கில் சின்னத்திரையில் பிரபலமான கதாநாயகியாக மாறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |