நாக சைதன்யா- சோபிதா பிரிவை துள்ளியமாக கணித்த ஜோதிடரின் திடீர் முடிவு- இதற்கு காரணம் இந்த குடும்பமா?
நாகசைதன்யா- சோபிதா துலிபாலா தம்பதிகளின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது? என கணித்த ஜோதிடர் திடீரென பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
நாகார்ஜுனா குடும்பத்தினர்
தமிழ் சினிமாவில் விஜய் போல் தெலுங்குத் திரையுலகின் பிரபலமான நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா.
இவருடைய மூத்த மகனும் நடிகருமான நடிகர் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா என்ற நடிகையை இரு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலின் வெளிபாடாக வீட்டிலுள்ளவர்கள் சம்பதத்துடன் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி திருமண நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளனர். அத்துடன் திருமணம் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான முதல் பல சர்ச்சையான கருத்துக்களை இணையத்தில் உலா வருகின்றன.
ஜோதிடரின் திடீர் முடிவு
இந்த நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த வேணு சுவாமி என்ற ஜோதிடர், நாக சைதன்யா-சோபிதா துலிபாலாவின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்றும் அவர்களின் பிரிவிற்கான காரணத்தையும் பிரியப்போகும் ஆண்டையும் அறிவித்துள்ளார். இவரின் கணிப்பு சமூக ஊடகங்களில் பரவி பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனை தொடர்ந்து, ஜோதிடர் மீது தெலுங்குத் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளது. அத்துடன் தெலுங்குத் திரையுலக நடிகர் சங்கத்தின் தலைவரான நடிகர் விஷ்ணு மஞ்சுவும் கண்டித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து திடீரென காணொளி வெளியிட்ட வேணு சுவாமி, “நான் வேண்டுமென்றே யார் மனதையும் புண்படுத்துவதற்காக இந்த கணிப்பை வெளியிடவில்லை. ஜோதிட கணிப்பைத் தான் கூறினேன்.
இனி வரும் காலங்களில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் குறித்தான எனது கணிப்பை பொது வெளியில் கூறப் போவதில்லை,” என பேசியுள்ளார்.
இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியொரு நிலையில், நாக சைதன்- நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கடந்த 2021ல் விவாகரத்து பெற்றுப் பிரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |