Siragadikka Aasai: மயங்கி விழுந்த அப்பா... ரோகினியை அடி வெளுத்த முத்து
சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை மயங்கிவிழுந்ததை பார்த்து முத்து ரோகினியை அடித்து கீழே தள்ளிவிட்ட ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் உண்மை மீனாவிற்கு தெரியவந்துள்ள நிலையில், இதனால் வீட்டில் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றார்.
ஆம் வீட்டில் மாமியாருக்கு பிடிக்காத மருமகளாக இருக்கும் மீனா, ஊருக்கு சென்ற போது குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார்.

அப்பொழுது மாமியாருக்கு பிடித்த மருமகளான ரோகினி தனது தந்தைக்கு திதி கொடுத்ததை மீனா பார்த்துள்ளார். அதுமட்டுமின்றி ஏற்கனவே ரோகினி திருமணம் ஆனவர் என்றும் க்ரிஷ் அவரது மகன் என்பதும் மீனாவிற்கு தெரிந்துள்ளது.
இந்த உண்மையை அறிந்த மீனா யாரிடமும் கூற முடியாமல் திணறி வருவதுடன், வீட்டு வேலைகளையும் தவறாக செய்து குற்றவாளியாக நிற்கின்றார்.
இந்நிலையில் உண்மை அறிந்து அண்ணாமலை வீட்டில் மயங்கி விழுவதைக் கண்ட முத்து ஆத்திரத்தில் ரோகினியையும் அடித்து வெளியே தள்ளுகின்றார். இதில் ரோகினி பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கின்றார்.
பின்பு முத்துவை பொலிசார் கைது செய்து அழைத்துச் செல்வதாக காட்டப்பட்டுள்ளது. இக்காட்சியானது மீனா வீட்டில் உண்மை தெரிந்தால் என்னவாகும் என்பதை நினைத்துப் பார்த்துள்ளது போன்று தெரிகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |