Siragadikka Aasai: சமையலறையில் அண்ணாமலை மற்றும் விஜயா! ரொமான்ஸை கண்காணிக்கும் பிள்ளைகள்
சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை வனஜா இருவரும் கிச்சனில் தனது காதலை வெளிப்படுத்துவதை குடும்பத்தினர் வெளியே இருந்து அவதானிக்கும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
நடுத்தர குடும்ப பெண் தனது மாமியார் வீட்டில் படும் கஷ்டத்தையும், ஆனால் வீட்டிற்கு நல்ல மருமகளாகவும் இருப்பதையும் அழகாக எடுத்துக் காட்டியுள்ளது.
மேலும் மூன்று மகன்களில் இரண்டு மகன்களை மட்டும் நன்றாக பார்க்கும் தாய் ஒரு மகனை மட்டும் ஒதுக்கி வைக்கின்றார். இதற்கான காரணம் இன்னும் சீக்ரெட்டாக இருக்கின்றது.
சமீபத்தில் அண்ணாமலை விஜயா, நகை பிரச்சனையில் பேசிக்கொள்ளாமல் இருந்த நிலையில் ஊரிலிருந்து வந்த பாட்டி இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளார்.
தற்போது விஜயாவை அவரது கணவருக்கு சாப்பாடு வைத்து கொடுப்பதற்கு கிச்சனுக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னாடியே அண்ணாமலையும் கிச்சனுக்குள் நுழைகின்றார். இதனை பிள்ளைகள் மறைந்து நின்று அவதானிக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |