Siragadikka Aasai: அண்ணாமலை கொடுத்த சூப்பர் ஐடியா... புயலாக கிளம்பிய மீனா
சிறகடிக்க ஆசை சீரியலில் சூழ்ச்சியினால் மீனா ஏமாந்து நிற்கும் நிலையில், அண்ணாமலை அசத்தலான ஐடியா ஒன்றினைக் கொடுத்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து வாழ்க்கையை கொண்டு செல்லும் மீனாவை மாமியார் கொடுமை செய்கின்றார். ஆனால் கணவர் முத்து மீனாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார்.
மீனா தனியாக தொழில் ஒன்றினை தொடங்கியுள்ள நிலையில், இவருக்கு தொழில் போட்டியாக சிந்தாமணி என்ற வில்லி களமிறங்கியுள்ளார்.
இவர் விஜயாவுடன் சேர்ந்து கொண்டு, மீனாவிற்கு எதிராக திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது இருவரும் சேர்ந்து 2 லட்சம் ரூபாய் மீனாவிற்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார்.
இத்தருணத்தில் அண்ணாமலை வெளிநபர் ஒருவர் தன்னை ஏமாற்றியதையும், தான் பதிலுக்கு செய்த காரியத்தையும் குறித்து மீனாவிடம் பேசியுள்ளார்.
கிட்டத்தட்ட மீனாவின் கதை போன்று இக்கதை இருந்ததால், அண்ணாமலை கொடுத்த ஐடியா மீனாவிற்கு புதிய யோசனையை கொடுத்துள்ளது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |