சைனஸ் சளி பிரச்சனைக்கு நிரந்தரவு தீர்வு வேண்டுமா?... இந்த இலையை பயன்படுத்துங்க
சைனஸ் மற்றும் சளி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அளிக்கும் கற்பூரவள்ளி இலைகளின் நன்மைகளை குறித்து தெரிந்து கொள்வோம்.
ஓமவல்லி பயன்கள்
இன்று பலரது வீட்டில் மருந்து செடியாக இருக்கும் ஓமவல்லி இலைகள், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படுகின்றது.
எண்ணற்ற பலன்களைக் கொண்ட இந்த இலையின் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
தோலில் மேற்பரப்பில் கிருமி தொற்றினால் படை, சொறி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால், குறித்த இலையை நன்கு கசக்கி அதன் சாறை பாதிக்கப்பட்ட இடத்தில் போட்டு வந்தால் குணமாகும்.
மழை மற்றும் குளிர்காலங்களில் சுவாச பிரச்சனையினால் பாதிக்கப்படுபவர்கள் குறித்த சாறை குடித்தால் மூக்கடைப்பு, சைனஸ், சளி தொந்தரவுகள் தீரும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்க, துளசி மற்றும் கற்பூரவல்லி சமமாக எடுத்து தினமும் காலை 5 மில்லி அருந்தினால் சரியாகும். இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் ஆஸ்துமா மற்றும் காச நோயாக மாறும்.
அஜீரண பிரச்சனை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள், கற்பூரவள்ளியின் செடியின் இலை சாற்றினை அருந்தினால் நல்ல தீர்வு கிடைக்கும்.
அதிகப்படியான உப்பு மற்றும் இதர பொருட்களின் கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்ற உதவும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. சிறுநீரை பெருக்கவும், சிறுநீரகங்களில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகத்தை பாதுகாக்கும்.
இந்த இலையில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு உதவுகின்றது.
நோய் எதிர்ப்பு அதிகரிக்கவும், உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கவும் கற்பூரவள்ளி இலைகள் உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |