கைத்தட்டலில் உலகை வியக்க வைத்த இயைஞர்! என்ன செய்தார் தெரியுமா?
தற்போது இணையத்தில் நம்மை வியக்க வைக்கும் வீடியோக்கள் செய்து பதிவிடுவது அதிகமாகி வருகிறது.
இளைஞனின் சாதனை
அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட இளைஞரொருவர், ஒரு நிமிடத்திற்கு ஆயிரத்து 140 முறை கைத்தட்டி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
டேவன் போர்ட் என்ற பகுதியைச் சேர்ந்த டால்டன் மேயர் என்ற 20 வயதான இளைஞரொருவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
இவர் முன்னால் ஒரு கணிப்பானை வைத்து ஒரு வினாடிக்கு 19 முறை என, ஒரு நிமிடத்தில் ஆயிரத்து 140 முறை கைத்தட்டியுள்ளார் இது கணிப்பானில் பதிவாகியுள்ளது.
சாதனை குறித்து டால்டன் மேயரின் கருத்து
மேலும் இதற்கு முன்னர் படைக்கப்பட்ட சாதனைகளை விட 37 கைத்தட்டல்கள் வித்தியாசத்திலே இவர் முன்னிலையில் இருக்கிறார்.
இந்த சாதனை குறித்து டால்டன் மேயர், பயிற்சிகள் கூட பெறவில்லையென அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
New record: Most claps in one minute - 1,140 by Dalton Meyer (USA)
— Guinness World Records (@GWR) November 11, 2022
Round of applause for this newest record ????? pic.twitter.com/SFzIWXt43L