இளையராஜா தலைமையில் நடந்த திருமணம்.. காதலியை கரம்பிடித்த பாடகர்- வைரலாகும் பதிவு
இளையராஜா தலைமையில் காதலியை பாடகர் தெருக்குரல் அறிவு கரம்பிடித்தார் என்ற செய்தி புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இசைஞானி இளையராஜா
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபலமாக இருப்பவர் தான் இசைஞானி இளையராஜா.
இவர், தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பாடல்களை பாடியும் இசையமைத்தும் இருக்கிறார். கடைசியாக இவர் இசையில், விடுதலை 2 படத்தில் பாடலொன்று வெளியாக ரசிகர்கள் மத்தியில் உலா வருகின்றது.
இசைஞானி இளையராஜாவிடம் வேலை பார்க்கும் தெருகுரல் அறிவு, ஆரம்ப காலங்களில் சுயாதீன பாடல்கள் மூலம் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து பல சினிமா திரைப்பட பாடல்களுக்கு வரிகள் எழுதி,பாடியும் இருக்கிறார்.
காதல் நடந்த திருமணம்
Super singer: தன்னுடைய அசாத்திய திறமையால் நடுவரை குஷிப்படுத்திய சிறுமி.. கடைசியில் பிரியங்கா கொடுத்த பட்டம்
இந்த நிலையில்,இவர், கல்பனாவை என்ற பெண்ணை காதலித்து இசைஞானி இளையராஜா தலைமையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் இளையராஜா தலைமையில் தெருக்குரல் அறிவு- கல்பனா திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்த நிகழ்வின் போது இயக்குனர் பா. ரஞ்சித் உட்பட பலரும் உடன் இருந்து தம்பதியை வாழ்த்துயுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |