மாடர்ன் உடையில் ரொமான்ஸில் கலக்கும் செந்தில்- ராஜலட்சுமி
நாட்டுப்புற பாடகர்களான பிரபலமான தம்பதிகள் செந்தில்- ராஜலட்சுமி ஜோடி தற்போது மொடர்ன் உடைக்கு மாறி பல புகைப்படங்களை தெறிக்கவிட்டிருக்கிறார்கள்.
ராஜலட்சுமி செந்தில்
பிரபல தொலைக்காட்சியொன்றில் மேடையேறியவர் தான் ராஜலட்சுமி இந்த நிகழ்ச்சியில் இவர் மட்டும் பங்கு கொள்ளாமல் தனது கணவருடன் ஜோடியாக பங்கேற்றிருந்தார்.
இந்த இரு ஜோடிகளின் குரல் தற்போது பட்டித்தொட்டியெல்லாம் மொழி தெரியாதவர்களையும் இவர்களின் பாடலுக்கு ஆடும்படி செய்து விட்டார்கள்.
‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ பாடல் மூலம் திரையில் அறிமுகமாகி தற்போது ஆங்கிலம் மொழி மூலம் பாடல் பாடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்.
இவரின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். அவ்வாறு தான் இவர்களின் பாடல்களும் நாட்டுப்புறப்பாடல்கள் அதிகம் ஆனாலும் அவை அனைத்தும் ஒவ்வொரு ரகமாக அமைந்திருக்கும்.
ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு விதமாக பாட ஆரம்பித்து தற்போது பின்னணி பாடகர்கள் ஆகும் அளவிற்கு வளர்ந்து விட்டார்கள்.
ராஜலட்சுமியும் அவரது கணவர் செந்திலும் பாடல் பாட மட்டுமல்ல நடிக்கவும் முடியும் என தற்போது இருவரும் இருளி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். ராஜலட்சுமி லைசன்ஸ் என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.
வைரல் போட்டோஸ்
இவர்கள் இருவரும் அடிக்கடி இணைந்து அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் போட்டோஸ்களை வெளியிட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் எப்போதும் புடவையையும் வேஷ்டியையும் கட்டிக் கொண்டு இருக்கும் இந்தக் காதல் ஜோடிகள் தற்போது மொடர்ன் உடையில் ஹீரோ, ஹீரோயின் போல இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்தப் புகைப்படம் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.