நடக்க முடியாத வயதிலும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பாடகி சுசிலா: வைரல் புகைப்படம்
பிரபல பின்னணி பாடகியான பி.சுசீலா, திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
பி.சுசிலா
இவர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர். இந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என இந்திய மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
தற்போது 88 வயதாகும் இவர் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் முடி காணிக்கை கொடுத்து தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 1950 காலப்பகுதியில் க்ளாசிக் சினிமாவில் முன்னணி பாடகியாக திகழ்ந்தவர்.
அதேபோல் பின்னணி பாடகியாக முதல் தேசிய விருதை வென்ற பெண்மணி என்ற பெருமை பி.சுசீலாவுக்கு உண்டு. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார் பி.சுசீலா பல முன்னணி இசையமைப்பாளருகளின் இசையில் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
சினிமாவில் பாடகியாக உச்சத்தில் இருந்த பி.சுசீலா பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், படமும் பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
இதன் பிறகு 2021ம் ஆண்டு வெளியானக நாற்பது தென்றல் என்ற படத்தில், ‘’வண்ண வண்ண கோமளமே’’ என்ற பாடலை பாடியிருந்த பி.சுசீலா, வயது மூப்பு காரணமாக தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.
இதனிடையே பி.சுசீலா தற்போது திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 2 பேரின் துணையுடன் நடக்க முடியாமல் வந்த பி.சுசீலா, முடி காணிக்கை செலுத்திவிட்டு, சாமி தரிசனம் செய்தார்.
மேலும் நாராயண மந்திரம் பாடலை மூச்சிறைக்க பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சுசீலாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |