மறைந்த பாடகர் கேகே-விடம் இத்தனை கோடியில் சொகுசு கார்கள் உள்ளதா?
பிரபல பாடகரான கிரிஷ்ணகுமார் குன்னத்தின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
இவர். இதுவரை 3,500க்கும் அதிகமான பாடல்களை கேகே பாடியிருக்கின்றார். மும்பையில் இவரின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
பல திரையுலகினர்கள் அஞ்சலி செலுத்தினர். கேகே-வை பற்றி பல செய்திகள் வெளிவந்த நிலையில், அவர் மிகச்சிறந்த கார் பிரியர் எனவும் கூறப்படுகிறது.
இதற்கு காரணம் அவர் பயன்பாட்டில் மட்டுமே பல விலையுர்ந்த ஆடம்பர கார்கள் இருந்துள்ளது.
Audi RS5
கேகே பயன்படுத்திய கார்களில் விலையுர்ந்த மாடல்களில் ஒன்று தான் ஆடி ஆர் எஸ் 5. இந்த காரை சமீபத்தில் தான் வாங்கியுள்ளார்.
இந்த மாடலில் உயர்நிலை வேரியண்டான ஸ்போர்ட் பேக் என்ற மாடலை வைத்திருந்தார்.
இதுமாதிரியான சூப்பரான கார்கள் சிலவற்றரை அவர் வைத்திருந்த காரணத்தினால் தான், கேகே-வை மிக சிறந்த கார்கள் டேஸ்ட் கொண்டவர் என கூறுகின்றனர்.
ஆடி ஆர்எஸ் 5 காரை டெலிவரி எடுத்த புகைப்படங்களை தற்போதும் இணையத்தில் காண முடியும்.
இதன் விலை ரூ. 1.07 கோடிகள் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் காரில் 2.9 லிட்டர் பை-டர்போ வி6 டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
Jeep Grand Cherokee
மேலும், ஆடி ஆர்எஸ்5 சூப்பர் காரை தொடர்ந்து ஜீப் நிறுவனத்தின் கிராண்ட் செரோக்கி மாடலையும் கேகே தன் வசம் வைத்திருந்தார். இந்த காரை தான் தன்னுடைய பெரும்பாலான பயணங்களுக்கு கேகே பயன்படுத்தி வந்துள்ளார். இந்த காரின் மதிப்பு மட்டுமே ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான ஒன்று.
Mercedes-Benz A-Class
அடுத்து, ஜீப் கிராண்ட் செரோக்கி சொகுசு கார் மாடலைத் தொடர்ந்து பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸின் ஏ-கிளாஸ் காரையும் கேகே பயன்படுத்தியிருக்கின்றார். இதன் மதிப்பு ரூ. 30 லட்சத்திற்கும் அதிகம் ஆகும்.