ரவி மோகனால் ஏற்பட்ட பிரச்சனை! பாடகி கெனிஷா எடுத்த அதிரடி முடிவு என்ன?
ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாடகி கெனிஷா தன்னைப் பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
ரவி மோகன் கெனிஷா
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்த நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு சென்று கொண்டிருக்கும் போதே ரவி மோகன், பாடகி கெனிஷா இருவரும் ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மேலும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.
பின்பு ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தம்பதிகள் மாறி மாறி அறி்க்கை வெளியிட்டு வந்தனர். நீதிமன்றமும் இனி எந்தவொரு அறிக்கையும் வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பாடகி கெனிஷா தனது instagram பக்கத்தில், "பாலியல் மிரட்டல், ஆபாச பேச்சு, கொலை மிரட்டல் விடுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். என்னைப் பற்றி அவதூறுகளை அனுமதிக்க மாட்டேன். சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |