90 வயது மாமியாரை தலையில் சுமந்து சென்ற பாடகி! வைரலாகும் காணொளி
ஹரியானாவைச் சேர்ந்த பாடகி ஒருவர் 90 வயதுடைய தன்னுடைய மாமியாரை தலையில் வைத்து சுமந்து சென்ற காணொளி வைரலாகி வருகின்றது.

வைரல் காணொளி
ஹரியானாவைச் சேர்ந்த பாடகி ஒருவர், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கூடையில் தனது 90 வயது மாமியாரைத் தலையில் சுமந்துகொண்டு 260 கி.மீ. தூரம் கொண்ட '84-கோஸ் பிரிஜ் பரிக்ரமா' யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அந்த காணொளி தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பிரஜ் பகுதியை மத ரீதியாக வலம் வர வேண்டும் என்ற தனது மூதாட்டியின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, அவரைத் தானே சுமந்து செல்ல முடிவு செய்ததாக காஜல் சௌத்ரி கூறினார்.

"இது என்னுடைய சொந்த முடிவு. என் மாமியார் இதைச் செய்யும்படி என்னிடம் கேட்கவில்லை. நான் இதை என் மனநிறைவுக்காகச் செய்கிறேன்," என்று சௌத்ரி கூறினார்.
Unique service was witnessed during the Braj 84 Kos Parikrama.
— Dharm (@dhram00) June 1, 2026
-A daughter-in-law carried her mother-in-law on her head for the pilgrimage.
-Such love, respect, and dedication are rarely seen in today's times. Radhe Radhe! pic.twitter.com/NXOYsHZlJM
சுமார் 260 கி.மீ. தூரம் கொண்ட 84 கோஸ் பிரிஜ் பரிக்ரமா, உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், கிருஷ்ணரின் புராணக்கதைகளுடன் தொடர்புடைய முக்கிய இடங்கள், குளங்கள் மற்றும் காடுகள் வழியாகச் செல்கிறது.
பக்தர்கள் பொதுவாக இந்த யாத்திரையை முடிக்க சுமார் 40 நாட்கள் எடுத்துக்கொள்வார்களாம். தற்போது இந்த காணொளி இணையத்தில் பாராட்டுக்களை பெற்று வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |