அனிருத் செய்த முதல் ப்ரொபோஸ்... 3 மணி நேரத்தில் தோல்வியா?
Composer Anirudh First Love Story: இசையமைப்பாளர் அனிருத் திருமணம் இன்று கிரீஸ் நாட்டில் நடைபெற்றுள்ள நிலையில் அவரது முதல் காதல் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இசையமைப்பாளர் அனிருத்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம்வரும் அனிருத் அடுத்தடுத்து பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 படத்தில் இசையமைத்திருந்த நிலையில், அடுத்ததாக தர்மன் படமும் வெளிவர இருக்கின்றது.
இந்நிலையில் அனிருத் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகளான காவ்யாவை காதலித்து வந்த நிலையில் இன்று இவர்களது திருமணம் க்ரீஸ் நாட்டில் உள்ள தனி தீவு ஒன்றில் நடைபெற்றுள்ளது.

சென்னையில் வரும் 21ம் தேதி பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியினை அனிருத் நடத்தவுள்ளனர். இந்நிகழ்வில் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அனிருத் திருமணத்திற்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, சென்றுள்ளனர். மேலும் அனிருத் உறவினராக ரஜினியும் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.
அனிருத் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஒய் திஸ் கொலவெளி என்ற பாடல் மூலமாக அறிமுகமாகி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.

அனிருத்தின் முதல் காதல்
இந்நிலையில் அனிருத் திரைக்கு வந்த புதிதில் அளித்துள்ள பேட்டியில், பள்ளிப்பருவ காதலைக் குறித்து கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இசை மீது தனக்கு ஆர்வம் இருப்பதை தெரிந்து கொண்டு பெற்றோர்கள் இசை வகுப்பில் சேர்த்துவிட்டனர். படிப்பிலும் நன்றாக படிப்பேன்...
8ம் வகுப்பு வரையிலும் அமைதியாக இருந்த நான், பின்பு சேட்டை செய்ய ஆரம்பித்தேன்... ஆனால் பள்ளியில் எப்போழுதும் நல்ல பையனாகவே இருப்பேன்.

மேலும் பள்ளி படிக்கும் போது பெண் ஒருவருக்கு ப்ரொபோஸ் செய்ததாகவும், ஆனால் 3 மணி நேரத்தில் அது போய்விட்டது என்று கூறியுள்ளார்.
பின்பு வேலைக்கு வந்த பின்பு அதிகமான ப்ரொபோஸ் வந்த நிலையில், அவை அனைத்தையும் தனது வேலைக்காகத் தான் வருகின்றது என்பதை தெரிந்து கொண்டேன். தற்போது தனது வேலையினை சரியாக செய்து வருகின்றேன் என்று கூறியிருந்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |