ரசிகை ஆசையை நிறைவேற்றிய அனிருத்- கைத்தட்டி வரவேற்பு கொடுத்த அரங்கம்
விழாவில் ரசிகை கேட்டவுடன் அவரின் ஆசையை நிறைவேற்றிய அனிருத்தின் அன்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அனிருத்
கோலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் அனிருத்.
தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு இவர் தான் இசையமைப்பாளராக இருந்து வருகிறார். அந்தளவு சிறப்பான பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கிறார்.
கடைசியாக அவரது இசையமைப்பில் வேட்டையன், இந்தியன் 2, தேவரா உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெளியாகியுள்ளன.
இதனை தொடர்ந்து, கூலி, தளபதி 69 உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. அனிருத் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார்.
ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய காட்சி
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சியொன்று கலந்து கொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்துள்ளார்.
அந்த வகையில், ரசிகையொருவர் எங்களுக்கு ஒரு பாடல் பாட முடியுமா?” எனக் கேட்டதற்கு, “உன் அலும்ப பார்த்தவன், உங்க அப்பன் விசில கேட்டவன்..” என்ற ஜெயிலர் பட பாடலை பாடி அசத்தியிருந்தார்.
இதனை குறித்த ரசிகை அவருடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அந்த சம்பவம் குறித்து நெகிழ்ந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |