இசையமைப்பாளர் அனிரூத்திற்கு வெளிநாட்டில் திருமணமா? பின்னணியில் உள்ள சீக்ரெட் என்ன?
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிரூத், பிரபல தொழிலதிபர் மகளை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் அனிரூத்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான அனிரூத்தின் திருமணத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் காவ்யா மாறனுடன் அனிரூத்திற்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த தகவல் உண்மையா என ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் காணப்படுகின்றனர். இதற்கு முன்பு இதே போன்று தகவல் கசிந்த போது அனிரூத் நேரடியாக பதில் அளித்திருந்தார்.
அனிரூத் அளித்த பதில், “Marriage ah? lol.. Chill out guys. Please stop spreading rumours” எனறு தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

மீண்டும் எழும்பிய சந்தேகம்
காவ்யா மாறன், ஐபிஎல் தொடரில் சன் சைரரஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக அறியப்படும் நிலையில், இவரது பேட்டிகள் இணையத்தில் அதிகமாக அவ்வப்போது வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் காவ்யாவிற்கும், அனிரூத்திற்கும் வரும் நவம்பர் மாதத்தில் ஸ்பெயினில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், இவர்களின் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இவ்வாறான தகவல் வெளியாகிவந்தாலும், அனிரூத் தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |