Singappenne: உறவை புதுப்பிக்க வந்திருக்காளா? மகேஷ் அம்மாவிடம் தலைகுனிந்து நிற்கும் வார்டன்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்திக்கு உதவி செய்வதற்கு வார்டன் மகேஷின் பெற்றோரைப் பார்த்து தலைகுனிந்து நிற்கும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சிங்கப்பெண்ணே
குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னையில் வேலைக்கு வந்த கிராமத்து பெண்ணான ஆனந்தி, தன்னை சீரழித்தது யார் என்று கண்டுபிடிப்பதற்கு தற்போது முயற்சி செய்து வருகின்றார்.
ஆனந்திக்கு உதவியாக அன்பு இருந்து வரும் நிலையில், மருத்துவமனையில் இருக்கும் ரகுவின் மருத்துவ செலவிற்கு பணம் தேவைப்படுகின்றது.
இதனால் அன்பு வீட்டிலிருந்து நகையை வாங்க முயற்சிக்கின்றார். ஆனால் அவரது அம்மா அதற்கு செக் வைத்து மாமா பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று கூறுகின்றார்.
மற்றொரு புறம் வார்டன் ஆனந்திக்காக மகேஷ் வீட்டிற்கு வந்து அசிங்கப்பட்டு நிற்கின்றார். உறவினை புதுப்பிக்க வந்திருக்காளா? பிள்ளையை பறிக்க வந்திருக்காளா? என்று மகேஷ் அம்மா வார்டனை கடுமையாக பேசியுள்ளார்.
வார்டனுக்கும், மகேஷ் பெற்றோருக்கு என்ன சம்பந்தம் என்பதை சீக்ரெட்டாக வைத்துள்ளனர். மேலும் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு காரணம் மகேஷ் என்பதையும் கதையில் இன்னும் சீக்ரெட்டாக வைத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |