Singappenne: ஆனந்தியை தீர்த்துகட்ட துளசி போட்ட திட்டம்! அன்பு காப்பாற்றுவாரா?
சிங்கப்பெண்ணே சீரியலில் தேனிலவிற்கு சென்ற ஆனந்தியை கொலை செய்வதற்கு துளசி வந்து்ளள நிலையில், படகிலிருந்து கீழே தள்ளிவிடும் காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை தெரிந்து கொள்ள பல முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
அன்பு தனது கழுத்தில் தாலி கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், மகேஷின் ஏற்பாடால் தற்போது தேனிலவிற்கு சென்றுள்ளனர்.

அங்கு துளசி தனது வேலையைக் காட்ட வந்துள்ளார். ஆம் அன்பு ஆனந்தி இருவரும் போட்டிங் சென்ற நிலையில், துளசி நபர் ஒருவரை ஏற்பாடு செய்து தனது நாடகத்தினை ஆரம்பித்துள்ளார்.
அதாவது போட்டிங் சென்று கீழே இறங்கிய ஆனந்தியை மீண்டும் தன்னுடன் துளசி அழைத்துச் சென்றுள்ளார். வேறொரு பெண் போன்று மாறுவேடத்தில் இதனை செய்துள்ளார்.
அன்பு இருமனதில் ஆனந்தியை மீண்டும் அனுப்பிவிட்ட நிலையில் தன்னுடன் பயணித்த ஆனந்தியை நடு ஏரியில் வைத்து கீழே தள்ளிவிடுவதற்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் தற்போது ப்ரொமோவாக வெளியாகியுள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |