Singappenne: நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்... மகேஷிற்கு உண்மை தெரியவரும் தருணம்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு தான் காரணம் இல்லை என்பதை அன்பு சத்தியம் செய்து நிரூபித்துள்ள நிலையில், மகேஷ் குழப்பத்தில் காணப்படுகின்றார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை தேடி வருகின்றார்.
இதற்கு அன்பு உதவியாக இருக்கும் நிலையில், இவர்கள் காட்டுக்குள் வழிதவறி சென்றுவிடுகின்றனர். அத்தருணத்தில் காட்டில் வாழும் மக்களிடம் சிக்கிக்கொள்ளவே, அங்கு ரகு ஆனந்தியின் கண்ணில் படுகின்றார்.

உடனே அன்பு ரகுவை விரட்டி செல்லும் போது போலிசார் அன்புவை பிடித்துக் கொண்டு சென்றுள்ளனர். பின்பு மகேஷ் அன்புவை வெளியே கொண்டு வந்துள்ளார்.
மகேஷிற்கு ஆனந்தியின் கர்ப்பத்திற்கு அன்பு காரணம் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருந்த தருணத்தில் அதனை பொய் என்று சத்தியம் செய்து நிரூபித்துள்ளார்.
தற்போது மகேஷிற்கு உண்மை தெரியவருவது போன்று ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. வரும் வார ப்ரொமோவில் தான் பெரிய தப்பு பண்ணிவிட்டதாக புலம்புகின்றார் மகேஷ்.
மற்றொரு புறம் ரகு அனைத்து உண்மையையும் போலிசாரிடம் கூறிவிடுவேன் என்று கருணாகரனிடம் சண்டை போட்டு வருகின்றார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |