புத்தாண்டு சிறப்பாக இருக்க வேண்டுமா? முதல்நாளில் இதை கட்டாயம் செய்திடுங்க! சாணக்கிய நீதி
புத்தாண்டின் முதல்நாள் கட்டாயம் செய்ய வேண்டியவைக் குறித்து சாணக்கிய நீதியில் எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சாணக்கிய நீதி
சாணக்கியர் கி.மு 300ம் காலக்கட்டத்தில் வாழ்ந்த ஆசிரியர், எழுத்தாளர், பொருளாதார நிபுணர், சட்ட நிபுணர், தத்துவவாதி மற்றும் அரசியல்வாதி என பல பரிமானங்களைக் கொண்டவர் கூறிய சில பொன்மொழிகள் தான் சாணக்கியரின் நீதி என்று அழைக்கப்படுகின்றது.
இந்த நீதியில் ஒரு மனிதனின் வாழ்க்கை முறையில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் குறித்து தத்துவங்கள் விரிவாக கூறப்பட்டுள்ளது. இதன்படி புத்தாண்டு முதல்நாளில் நாம் செய்ய வேண்டிய சில விடயங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புத்தாண்டில் செய்ய வேண்டியது என்ன?
உங்களது பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றி சிந்திப்பது வெற்றிகரமான வாழ்வின் முதல் படியாகும். ஆகவே புத்தாண்டின் முதல்நாளில், உங்களது கடந்த கால தவறுகளைக் குறித்து சிந்தியுங்கள் என்று கூறியுள்ளார்.
புத்தாண்டு தினத்தன்று நல்ல புத்தகத்தினை படிக்க வேண்டும். ஒரு புதிய திறமையைக் கற்றுக்கொள்ளுங்கள் அல்லது உங்களது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
காலையில் குளித்துவிட்டு பிரார்த்தனை செய்வது முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும்.

புத்தாண்டின் தொடக்கத்திலேயே உங்கள் நிதித் திட்டமிடலை செய்ய வேண்டும். சேமிக்க தொடங்குவதுடன், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உண்மையான செல்வம் ஆகும். ஆகவே பழைய சண்டைகளை மறந்து உறவினர்கள், நண்பர்களுடன் உறவை மேம்படுத்துவது புத்தாண்டு தினத்தில் அவசியமான ஒன்றாகும்.
புத்தாண்டினை உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் தொடங்க வேண்டும். ஆதலால் யோகா, தியானம் அல்லது உடற்பயிற்சி போன்ற விடயத்தினை செய்ய தொடங்க வேண்டும்.
இலக்கு இல்லாத வாழ்க்கை வீணான வாழ்க்கையாகும். எனவே புத்தாண்டிற்கான சில பெரிய இலக்குகளை நிர்ணயித்து அதனை நோக்கி செயல்படத் தொடங்க வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |