Singappenne: ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு! எதிர்பாராத அதிர்ச்சி தருணம்
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய காட்சி தற்போது ப்ரொமோவாக வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் சிங்கப்பெண்ணே.. இந்த சீரியலில் ஆனந்தி எதிர்பாராத விபத்தின் காரணமாக மகேஷின் குழந்தையை வயிற்றில் சுமந்து வருகின்றார்.
ஆனந்தியை ஆரம்பத்தில் இருந்து காதலித்து வந்த அன்பு தற்போது ஆனந்தி கர்ப்பமாக இருந்தாலும், அவரை திருமணம் செய்து கொள்வதற்கு காத்திருக்கின்றார்.
ஆனால் ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க பல வழிகளில் முயற்சித்து வருகின்றார். இத்தருணத்தில் ஆனந்தியின் தோழிக்கு திருமண ஏற்பாடு நடக்கின்றது.
இத்தருணத்தில் அன்புடன் மணமேடையில் அமர்ந்திருந்த ஆனந்தியின் கழுத்தில் சட்டென அன்பு தாலி கட்டியுள்ளார். தற்போது வெளியாகிய இந்த ப்ரொமோவில் ஆனந்தி பயங்கர அதிர்ச்சியில் காணப்படுகின்றார்.
இதிலிருந்து ஆனந்தியின் சம்மதம் அருக்கே தெரியாமல் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
