Singappenne: பிறந்தநாள் விழாவில் சர்வர் வேலை செய்யும் அண்ணன்... பார்ப்பாரா ஆனந்தி?
பிரபல ரிவியில் ஒளிபரபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
சிங்கப்பெண்ணே
கடந்த ஆண்டு பிரபல ரிவியில் தொடங்கப்பட்ட சிங்கப்பெண்ணே சீரியல், டி ஆர் பி-யில் முதல் இடத்தில் இருந்து வருகின்றது.
தர்ஷன் கிருஷ்ணா என்பவர் இயக்கும் இந்த சீரியலில், கிராமத்து பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதாவது தனது குடும்பத்திற்காக சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை செய்து கஷ்டப்படும் பெண் தான் ஆனந்தி.
ஆனந்தி கதாபாத்தில் மனீஷா மகேஷ் நடித்து வருகின்றார். மகேஷ் கதாபாத்திரத்தில் தர்ஷக் கவுடாவும், அன்பு கதாபாத்தில் அமல் ஜித் என இரண்டு ஹீரோக்கள் நடித்து வருகின்றனர்.
ஆனந்தி மீது அன்பு காதல் கொண்டுள்ளார், மகேஷ் ஆனந்தியை காதலித்து வருகின்றார். அழகன் என்ற பெயரில் அன்பு ஆனந்திக்கு நல்ல விடயங்களை செய்து வருவதால் ஆனந்திக்கு அழகன் மீது காதல் ஏற்பட்டுள்ளது.
சர்வர் வேலை செய்யும் அண்ணன்
ஆனந்தியின் வாழ்க்கையை சீரழிக்க நினைத்த மித்ராவிற்கு தற்போது ஏமாற்றமே ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஆனந்தியின் பிறந்தநாளை கோலாகலமாக மகேஷ் கொண்டாடியுள்ளார்.
இந்த கொண்டாட்டத்தின் போது தனது அண்ணனை நினைத்து வேதனைப் படுகின்றாள். ஆனால் அதே நிகழ்ச்சியில் ஆனந்தியின் அண்ணன் சர்வராக வேலை செய்து வருகின்றார்.
இது ஆனந்திக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரியவருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |