விஜய் பிறந்தநாளில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்... விபத்தில் முடிந்த கொண்டாட்டம்... பதற வைத்த சம்பவம்
நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சிறுவன் ஒருவன் விபத்தில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் பிறந்தநாள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இவரின் பிறந்தநாளையொட்டி பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறிவரும் நிலையில், நீலாங்கரையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பிறந்தநாளை முன்னிட்டு சாகசம் ஒன்று நிகழ்த்தப்படுவதற்கு சிறுவன் ஒருவர் அழைத்து வரப்பட்டுள்ளான்.
அப்பொழுது அவனது கையில் எதிர்பாராமல் தீ பற்றியுள்ளது. இதனை அணைப்பதற்கு அருகில் இருந்த நபர் தண்ணீர் என்று நினைத்து, பெட்ரோலை கொண்டு ஊற்றியுள்ளார்.
உடனே தீ சிறுவன் மீதும், குறித்த நபர் மீது பரவிய நிலையில், அக்கம் பக்கத்தினர் சற்று சுதாரித்துக் கொண்டு தீயை அணைத்ததுடன், அவர்களை மீட்டு மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர்.
ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் கள்ளக்குறிச்சி பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதால், தனது பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... அவர்கள் உதவி செய்யுமாறு தனது நிர்வாகிகள் அனைவரிடமும் விஜய் வேண்டு கோள் வைத்திருந்தார்.
இத்தருணத்தில் சிறுவன் கையில் தீ பற்றிய சம்பவத்தினை தெரிந்து கொண்டு விஜய்யின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
