Singappenne:அன்புவை ஒதுக்கும் ஆனந்தி - முடிவை பலமாக்கும் மித்ரா
சிங்கப்பெண்ணே சீரியலில் இது தான் சமயம் என மித்ரா மகேஷை காக்கா பிடிக்கிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல டிவி நிகழ்ச்சிகளில் இல்லதரிசிகள் மத்தியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சிங்கப்பெண்ணே. ஆனந்தியை அன்பு மற்றும் மகேஷ் என்ற இருவர் காதலித்து வந்தனர்.
அதில் ஆனந்தி அன்புவை தான் காதலிக்கிறார் என தெரிந்ததும் மகேஷ் ஆனந்தியை விட்டு ஒதுங்கி போயியுள்ளார். இந்த நிலையில் ஆனந்தி தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
அனந்தி கர்ப்பமாக இருப்பது மகேஷ்க்கு தெரியாமல் இருந்தது. ஆனால் இந்த உண்மை மகேஷ்க்கு தெரிய வந்து மகேஷ் அன்பு மேல் சந்தேகப்பட்டு அன்புவை அடித்து நிச்சயதார்த்ததை நிறுத்த வேண்டும் என கூறி இருந்தபடி எபிசோட்டில் காட்டப்பட்டது.
மகேஷ் மனதை குழப்பும் மித்ரா
ஆனந்தி எப்படி கர்ப்பமாக இருக்கிறார் என்பதற்கான உண்மை மித்ராவிற்கு மட்டும் தான் தெரியும். ஆனால் தற்போது அன்பு தான் ஆனந்தியை கர்ப்பமாக்கி இருக்கிறார் என மகேஷ் நினைத்துக்கொண்டு இருக்கிறார்.
இப்படி இருக்கையில் இது தான் தகுந்த சமயம் என மித்ரா மகேஷ்யிடம் அன்பு ஆனந்தி கழுத்தில் தாலி கட்டியே ஆக வேண்டும் என கூறுகின்றார்.
மறுபக்கம் அன்புவின் வாழ்க்கையை அழித்து தான் எனக்கு ஒரு வாழ்கை என்றால் அந்த வாழ்க்கை தேவை இல்லை என ஆனந்தி கூறுகிறார். இதனிடையில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |