Singappenne: கம்பெனியில் அம்பலமாகிய ஆனந்தியின் கர்ப்பம்... திடீரென வந்து நின்ற மகேஷ்! நடப்பது என்ன?
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் கர்ப்பத்தினை கம்பெனியில் சௌசௌ உளறியுள்ள நிலையில், இத்தருணத்தில் மகேஷும் கம்பெனிக்குள் நுழைந்துள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவருகின்றது. அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியைக் காதலித்து வந்தனர்.
பின்பு அன்புவும் ஆனந்தியும் காதலிப்பதை அறிந்த மகேஷ் ஒதுங்கி போயுள்ளார். இந்நிலையில் ஆனந்தியின் கர்ப்பம் அவரது அக்கா திருமணத்தின் போது கிராமத்தில் அனைவருக்கும் தெரிந்தது.
ஆனால் தனது கர்ப்பத்திற்கு காரணமானவனை கொண்டு வந்து நிறுத்துவதாக ஆனந்தி சவால் விட்டு கிராமத்தை விட்டு கிளம்பினார்.
தற்போது சென்னை கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு ஆனந்தியின் கர்ப்பம் தெரியாமல் இருந்த நிலையில், சௌசௌ சட்டென உளறியுள்ளார்.
இதனால் பொங்கி எழுந்த கருணாகரன் மகேஷிடம் கூறுவதாக மிரட்டுகின்றார். அத்தருணத்தில் மகேஷும் கம்பெனிக்குள் வந்து நிற்கவே, ஆனந்தியின் உண்மை அவருக்கு தெரியவருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
