Singappenne: அன்புவின் வீட்டிற்குள் நுழைந்த பார்வதி... விபரீத முடிவு எடுக்கும் மாமியார்
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு ஆனந்தியை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வந்துள்ள நிலையில், அவரது அம்மா பயங்கர கோபத்தில் அறைக்குள் சென்று கதவை அடைத்துள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை தேடி வருகின்றார்.
ஆனந்திக்கு அன்பு உதவியாக இருக்கும் நிலையில், தற்போது கருணாகரனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் மித்ரா மீதும் சந்தேகம் எழுகின்றது. இந்நிலையில் அன்பு ஆனந்தியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதற்கு அவரது அம்மா எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார்.
அன்பு ஆனந்தி இருந்தால் தானும் இருப்பதாக கூறி அம்மாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இறுதியில் அன்புவின் அம்மா கோபத்தில் அறைக்குள் சென்று கதவை அடைத்துள்ளார்.
மகேஷ் கனவு கண்டது போன்று அன்புவின் அம்மா தவறான முடிவை எடுத்துவிடுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |