Singappenne: மித்ரா கையில் முக்கிய ஆதாரம்- ஆனந்திக்காக கொலை செய்ய துணிந்த அன்பு?
சிங்கபெண்ணே சீரியலில் ஆனந்தி விவாகரத்தில் முக்கிய ஆதாரம் மித்ரா கையில் சிக்கியுள்ளது.
சிங்கப்பெண்ணே
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை காதலித்து வருகின்றனர். இவர்களில் ஆனந்தி, அன்புவை காதலிக்கிறார். இந்த விடயம் தெரிந்து கொண்ட மகேஷ் ஒதுங்கி போயுள்ளார்.
இந்த நிலையில் ஆனந்தியின் கர்ப்பம் அவரது அக்கா திருமணத்தின் போது கிராமத்தில் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. தற்போது ஆனந்தி வேலைச் செய்யும் இடத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்து விட்டது.
ஆனாலும் ஆனந்தி மீது தவறு இருக்காது என தெரிந்து அங்குள்ளவர்கள் ஆறுதலாக இருக்கிறார்கள்.
கர்ப்பத்திற்கு யார் காரணம் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் ஆனந்திக்கு தற்போது ரகுவின் நண்பன் உதவிச் செய்கிறார். அன்புவின் துணையுடன் ரகுவை பிடிப்பதற்கான முயற்சியை ஆனந்தி செய்து வருகிறார்.
மித்ரா கையில் முக்கிய ஆதாரம்
இப்படியொரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், மருத்துவமனையில் இருக்கும் ரகு தான் ஆனந்தியின் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என நினைத்த அன்பு இரவு வேளையில், ரகுவை கொன்று விடலாம் என முடிவில் அவரின் அறைக்குள் செல்கிறார்.
அன்பு, கருணாகரன்- மித்ராவை நாளுக்கு நாள் நெருங்குவதாக காட்சிகள் காட்டப்படுகிறது. ஒரு பெண்ணை இப்படி செய்ததற்கு மித்ரா நிச்சயம் பிரதிபலன்களை அனுபவிப்பார்.
மருத்துவமனையில் இருக்கும் அன்புக்கு, ஆனந்தி உணவு கொண்டு வந்து பரிமாறுகிறார். ஒரு பக்கம் பிரச்சினை வெடித்து கொண்டிருந்தாலும் இடையில் வரும் காதல் காட்சி சின்னத்திரை ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.
இதற்கிடையில், ரகுவின் தொலைபேசி மித்ரா கையில் சிக்கியுள்ளது. அப்போது ரகுவின் நண்பர் கோல் செய்து,“ பொலிஸிடம் இருந்து தப்பிவிட்டாயா?” எனக் கேட்க, மித்ரா-கருணாகரன் இருவருக்கும் பயம் கிளம்பியுள்ளது.
நேற்றைய தினம் ஆனந்தியின் இந்த நிலைக்கு காரணமாக இருக்கும் கருணாகரனை அன்பு வெளுத்து வாங்கியுள்ளார். ஆனால் இதற்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என காட்டாமல் கதைக்களம் சென்றுக் கொண்டிருக்கிறது.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
