தாங்க முடியாத பல்லி தொல்லையா? திசை தெறியாமல் ஓட விட இந்த ஒரோ ஒரு பொருள் போதும்
உங்கள் வீட்டில் பல்லிகள் அதிகம் சுற்றிக் கொண்டிருந்தால், அதை விரட்டும் முயற்சியில் உடனே ஈடுபடுங்கள்.
இல்லை என்றால் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தி விடும்.
பல்லியின் எச்சில் விஷ தன்மை கொண்டது. அதனால் வீட்டில் உள்ள பல்லியை விரட்டும் அற்புத மருத்துவ குணம் கொண் ஒரு பொருள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மிளகு
மிளகானது தூள் வடிவத்திலும் முழு வடிவத்திலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இது இந்திய குடும்பங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். மேலும் இது லேசான காரமான சுவையைக் கொண்டுள்ளது.
இது சுவை மொட்டுகளுக்கு புத்துணர்வு அளிக்கிறது. இது வாதம், தோல் நோய்கள் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவையும் கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது.
மிளகு மசாலா ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை அதிகரிக்கவும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அறியப்படுகிறது.இத்தகைய பயன் மிக்க மிளகை கொண்டு பல்லியை விரட்டியடிக்க முடியும்.
மிளகு ஸ்ப்ரே
மிளகினை கொண்டு தயாரிக்கும் மிளகு ஸ்ப்ரேயைக் கொண்டு எளிதில் பல்லியை விரட்டலாம்.
முக்கியமாக இந்த மிளகு ஸ்ப்ரேயில் எவ்வித கெமிக்கலும் சேர்க்க தேவையில்லை.
இதற்கு செய்ய வேண்டியதெல்லாம், மிளகுத் தூளை நீரில் கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, பல்லி சுற்றும் சுவற்றில் தெளித்துவிட்டால் போதும்.
நீங்கள் இருக்கும் திசை பக்கம் கூட பல்லி இனி எட்டி கூட பார்க்காது. உடனே முயற்சித்து பாருங்கள்.