தங்க நகைகளை புதுசு போன்று மாற்ற வேண்டுமா? இந்த ஒரு பொருளை வைத்து சுத்தம் செய்தாலே போதும்
தங்க நகைகளில் படிந்துள்ள அழுக்குகளை வீட்டிலேயே எளிய முறையில் எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக தங்க நகைகள் அணிவது என்றால் மிகவும் பிடித்தமான விடயமாகும். அதிலும் இன்றைய காலத்தில் தங்கம் விலை தாறுமாறாக எகிறிக் கொண்டு வருகின்றது.
ஆதலால் தன்னிடம் உள்ள பழைய நகைகளை புதுசு போல் வைப்பதற்கே பல பெண்கள் விரும்புவார்கள். ஆம் நகைகள் படிந்துள்ள அழுக்குகள், எண்ணெய்யை எவ்வாறு போக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தங்க நகையை எவ்வாறு சுத்தம் செய்வது?
சூடான தண்ணீரை கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அதில் சில துளிகள் டிஷ்வாஷை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்பு நகையை அதனுள் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, டூத் பிரஷ் கொண்டு சுத்தம் செய்து தண்ணீரில் கழுவவும்.
நகையில் எண்ணெய் பசை போக வேண்டும் என்றால் சூடான நீரில் தங்க நகைகளைப் போட்டு ஊற வைத்து, சில நிமிடங்கள் கழித்து மென்மையான ப்ரஷ் கொண்டு தேய்தால் போதுமாம்.
நாம் பற்களை சுத்தம் செய்ய பயன்படுத்தும் டூத் போஸ்ட்டை சிறிதளவு ப்ரஷில் எடுத்து நகை மீது தேய்த்து பின்பு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும். அழுக்குகள் நீங்கி சுத்தமாக இருக்குமாம்.
முத்துக்கள் மென்மையானது என்பதால் சிறிதளவு சூடான நீரில் மென்மையான ஷாம்பு கலந்து ஒரு மென்மையான பிரஷ் கொண்டு நகைகளை மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும்.
அதுவே பவளம் பதித்த நகைகளை கடைகளில் தான் கொடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |