bachelors recipe: அம்மா கைப்பக்குவதில் மசாலா ரைஸ்... பண்ணலாமா?
பொதுவாகவே வேலை நிமிர்த்தம் தூர பிரதேசங்களில் சென்று தங்கியிருப்பவர்கள் வீட்டு சாப்பாட்டை ரொம்பவே மிஸ் பண்ணுவார்கள்.
அப்படிப்பட்ட நேரங்களில் பழைய சாதத்தை வைத்தே பிரியாணி சுவையில் மசாலா சாதம் எளிமையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எப்படி செய்லாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பழைய சாதம்- ஒரு கப்
மஞ்சள் தூள்- 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள்- 1 தே.கரண்டி
சாம்பார் பொடி - 1 தே.கரண்டி
கரம் மசாலா- 1/2 தே.கரண்டி
ஏதாவது ஒரு ஊறுகாய்- 1 மேசைக்கரண்டி
தாளிப்பதற்புகு
எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
கடுகு- 1/2 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை- ஒரு கைப்படியளவு
காய்ந்த மிளகாய்- 2
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி
தக்காளி- 1 (நறுக்கியது)
கொத்தமல்லி- சிறிதளவு
உப்பு- 1/2 தே.கரண்டி (ஊறுகாய் சேர்த்திருப்பதால் உப்பை குறைத்துக்கொள்லாம்)

செய்முறை
முதலில் பழைய சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,சாம்பார் பொடி,கரம் மசாலா மற்றும் ஏதாவது ஒரு ஊறுகாய் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம்,கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து பொன்நிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி சேர்த்து, மென்மையான வதக்கிக்கொள்ள வேண்டும்.
நன்கு வதங்கிவரும் போது, ஏற்கனவே கலந்து வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, இறுதியாக உப்பு மற்றும் கொத்தமல்லியிலை தூவி இறக்கினால் அவ்வளவு தான் பிரமாதமான சுவையில் மசாலா ரைஸ் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |