கொடைக்கானலில் பங்களா சர்ச்சை.. கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வசமாக சிக்கிய நடிகர்!
“கோடிக்கணக்கில் கொடுத்தேன் ஆனாலும் என்னை ஏமாத்திட்டாங்க” என பிரபல நடிகர் பாபி சிம்ஹா கூறிய காட்சி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
நடிகர் பாபி சிம்ஹா
தமிழ் சினிமாவில் “ஜிகர்தண்டா” என்ற திரைப்படத்தின் மூலம் பிரபமானவர் தான் நடிகர் பாபி சிம்ஹா.
இவர் இந்த திரைப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, சூது கவ்வும், நேரம், ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இருந்தாலும் பாபி சிம்ஹாவிற்கு சரியான ஒரு வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது நடிகர் பாபி சிம்ஹாவை கோடிக்கணக்கில் பணம் வாங்கி விட்டு ஏமாற்றி விட்டதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. சர்ச்சை குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
கொடைக்கானலில் பங்களா சர்ச்சை
அதில், நான் கொடைக்கானலில் என்னுடைய அப்பா, அம்மாவிற்காக ஒரு வீடு கட்ட திட்டம் போட்டு அதற்கான பணத்தையும் கொடுத்துள்ளேன். ஆனால் அவர்கள் சரியாக வீட்டை கட்டவில்லை.
இந்த அழகிய நடிகைக்கு திருமணமாகி இவ்வளவு பெரிய குழந்தைகளா? ஷாக்கில் வாய்பிளக்கும் ரசிகர்கள்... கணவர் யார் தெரியுமா?
மாறாக பால் காய்ச்சும் போது வீட்டை பார்த்தேன். கட்டுமானப்பணி சரியாக இல்லை.
இது குறித்து குறித்த நபரிடம் கேட்ட போது அவர் நாளைய தினம் வரேன் என கூறி விட்டு தலைமறைவாக இருக்கிறார்.
மேலும் பொலிஸாரிடம் செல்ல வேண்டாம் என கொலை மிரட்டல்களும் வருகின்றது.” என கூறியுள்ளார்.
இந்த செய்தி கேட்டு பாபி சிம்ஹாவின் ரசிகர்களுக்கு கவலையடைந்துள்ளார்கள்.
திரைப்படத்தில் காட்டு விடயங்கள் யாவும் நிஜ வாழ்க்கையில் நடக்கும் பொழுது வேடிக்கையாக இருக்கின்றது என கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |