காமெடி நடிகர் செந்திலின் மகனா இது... என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? திடீரென்று அடித்த அதிர்ஷ்டம்
நடிகர் செந்திலின் மகனின் புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.
நடிகர் செந்தில் தற்போது பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் ‘தடை உடை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் செந்திலின் மகன் வேடத்தில் அவரின் மகன் மணி பிரபுவே நடித்துள்ளார்.
இது சம்மந்தமான படப்பிடிப்பு தளப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகர் செந்திலுக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்தவரான மணிகண்டபிரபு ஒரு மருத்துவர் ஆவார்.
இந்நிலையில் இப்போது தன் தந்தையின் படத்திலேயே அவர் நடிகராக அறிமுகமாகிறார். ஹீரோ போல இருக்கும் நடிகர் செந்தில் மகனை அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.
முதல் படமே தந்தையுடன் நடிக்க கிடைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காமெடி நடிகர்கள் தங்களின் இடத்தை நிலை நாட்ட நிறைய போராட்டங்களை சந்தித்து வருகின்றனர்.
அப்படி பல போராட்டங்களை கடந்து நடிகர் செந்தில் இன்றும் மக்கள் மத்தியில் நீங்காத ஒரு இடத்தினை பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.