ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பல இலட்சம் சம்பளம் பெற்ற சாயிஷா!
சிம்புவின் பத்துதல திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கும் வேற மாதிரி நடனம் ஆடிய சாயிஷா அந்தவொரு பாடலுக்கு மட்டும் இலட்சக்கணக்கில் சம்பளம் பெற்றிருக்கிறார்.
நடிகை சாயிஷா
வனமகன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சாயிஷா. பிறகு கார்த்தியுடன் கடைக்குட்டி திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அடுத்து விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார். அதன்பிறகு ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் காதலித்தனர்.
பிறகு 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. தற்போது குடும்பம் என செட்டிலாகிய சாயிஷா சிம்பு படத்தில் ரீஎன்ரி கொடுத்திருக்கிறார்.
ஒரு பாடலுக்கு கேட்ட சம்பளம் பத்து தல படத்தில் குத்தாட்டம் போட்ட சாயிஷா திருமணம் குழந்தை என செட்டிலாகிய பின்னர் சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்த இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு, சிம்புவின் பத்து தல படத்தில் வேற மாதிரி நடனமாடியிருக்கிறார்.
அந்த நடனத்திற்கு அவருக்கு நிறைய எதிர்மறையான கமெண்டுகள் வந்தாலும், இப்பாடலுக்கு ஆட்டம் போட ஆர்யா தான் காரணம் என்று சாயிஷா தெரிவித்து இருந்தார்.
அந்தப் பாடலுக்கு நடனம் ஆடியதற்காக நடிகை சாயிஷாவுக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
5 நிமிட பாடலுக்கு இப்படியொரு தொகையை பெற்றுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.