வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா? கதறி அழுத சினேகன்....சிம்பு கொடுத்த சர்ப்ரைஸ்!
பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து இந்த வாரம் தாடி பாலஜி குறைந்த ஓட்டுகளை பெற்று வெளியேறியுள்ளார்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகின்றது.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் அவர் சமீபத்தில் தன்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறி நிகழ்ச்சியிலிருந்து விலகினார்.
இதையடுத்து நடிகர் சிம்பு தற்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த வாரத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து தாடி பாலாஜி வெளியேறியுள்ளார். அவர் அதிக நேரம் சினேகனுடன் தான் நட்பாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் வெளியேற்றத்தினை தாங்க முடியாது கதறி கதறி அழுதார்.
இதேவேளை, நிகழ்ச்சி முடிவில் சிலம்பரசன் வைல் கார்ட் என்றி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் யார் உள்ளே வரப்போகின்றார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.