உடலுக்கு நன்மைகள் அள்ளி தரும் பீட்ரூட் ஆனால் இவர்கள் சாப்பிட்டால் ஆபத்தா?
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருவதில் பீட்ரூட் அதீத நன்மைகளைக் கொண்டுள்ளது. உடலில் இரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்ய பீட்ரூட் உதவுகிறது.
பீட்ரூட் சாப்பிடுவதால், உடலில் பல்வேறு மாற்றங்களைத் தரும். இதில் பல்வேறு வகையான சத்துக்கள் காணப்படுகின்றன.
நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், சோடியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஃபோலேட், மாவுச்சத்து, ஜிங்க் உள்ளிட்ட சத்துக்கள் காணப்படுகிறது.
இது பல நோய்களுக்கு தருந்தாவதால் பலரும் பல நோய் நிவாரணியாக எடுத்துக்கொள்ளலாம். இருந்தாலும் இதை குறிப்பிட்ட சிலர் அவர்கள் உணவில் தவிர்த்துக்கொள்வது நல்லது. இந்த பதிவில் அதை விரிவாக பார்க்கலாம்.
பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
தோல் ஒவ்வாமை: சிலருக்கு பீட்ரூட் ஒவ்வாமை இருக்கலாம், இது தோல் வெடிப்புகளை ஏற்படுத்தும், இதனால் ஒவ்வாமை உள்ளவர்கள் அதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
குறைந்த இரத்த அழுத்தம்: குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களும் பீட்ரூட்டை உட்கொள்ளக்கூடாது. இது இரத்த அழுத்தத்தை இன்னும் குறைக்கலாம்.
சளி மற்றும் இருமல் பிரச்சனை: பீட்ரூட் சளி பிடிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது, இதன் காரணமாக இதை சாப்பிடுவதால் சளி மற்றும் இருமல் பிரச்சனை ஏற்படும்.
நீரிழிவு நோய்: பீட்ரூட்டில் அதிக கிளைசெமிக் குறியீடு இருப்பதால் அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். நீரிழிவு நோயாளிகள் மருத்துவரை அணுகிய பின்னரே இதை உட்கொள்ள வேண்டும்.
சிறுநீரக கற்கள் உள்ள நோயாளிகள்: சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இதை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் அதில் உள்ள ஆக்சலேட் அவர்களின் நிலையை மேலும் மோசமாக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |