வெற்றியின் ரகசியம்: 60 நாட்களுக்கு இந்த 6 பழக்கங்களை கடைப்பிடித்து பாருங்க...
பொதுவாகவே வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் அனைவராலும் அவர்களின் இலக்குகளில் கவனம் செலுத்தி வெற்றியடைய முடிவதில்லை.
பெரும்பாலும் தனிதர்கள் ஒரே உடலமைப்பு ஒரே மூளையை கொண்டவர்களாக இருக்கின்ற போதிலும் ஏன் வாழ்வில் அனைரும் வெற்றியடைவது இல்லை என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
அதற்கு முக்கிய காரணம் நாம் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் தான். வாழ்வில் சாதித்தவர்கள் பின்பற்றும் முக்கியமான 6 பழக்கங்களை கடைப்பிடித்தால் நீங்களும் வாழ்வில் பெரிய மாற்றாத்தை காண்பீர்கள்.
வெறும் 60 நாட்களுக்கு இந்த 6 பழங்களை பின்பற்றுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். வாழ்வில் பெரிய சாதனையை நிகழ்த்தும் ஆற்றல் கிடைக்கும். அந்த முக்கியமான பழக்கங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெற்றியை பரிசளிக்கும் 6 பழக்கங்கள்
1. முதலாவது 60 நிமிடங்களுக்கு மேல் சமூக வலைத்தளங்களை பார்ப்பதை நிறுத்திவிடுங்கள். இன்று பெரும்பாலானவர்களின் வெற்றிக்கு பெரும் தடையாக இருப்பது சமூக வலைத்தளங்களின் அதிகரித்த பாவனை தான்.
2. தினசரி 60 நிமிடங்கள் ஏதாவது ஒரு புதிய விடயத்தை கற்றுக்கொள்வதற்கு முயற்சிசெய்யுங்கள். நமது ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், நாளுக்கு நாள் நமது அறிவுக்கு புதிய வேலைகளை கொடுக்க வேண்டியது அவசியம்.
3. உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினசரி 60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இது ஏனைய அனைத்து வேலைகளையும். புத்துணர்ச்சியுடன் செய்வதற்கு துணைப்புரியும்.
4. உளவியல் ரீதியான பிரச்சினைகளில் இருந்த விடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்தி, இலக்கில் கவனம் செலுத்த வேண்டும் என்றால் குறைந்தது தினசரி 10 நிமிடங்கள் தியானம் செய்யும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
5. மூளையை எப்போதும் புத்துணர்வுடன் வைத்திருக்கு தினசரி 10 பக்கங்களாவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
6. முக்கியமாக நாள் முழுவதும் ஆற்றலுடன் செய்ற்படுவதற்கு தினசரி 8 மணிநேரம் தூக்கம் அவசியம்.இரவு 10 மணி தொடக்கம் காலை 6 மணிவரையில் நன்றாக தூங்கும் பழக்த்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
இந்த 6 பழக்கங்களை 60 நாட்கள் கடைப்பிடித்தால் உங்கள் வாழ்வில் பெரிய மாற்றம் உண்டாவதை நீங்களே உணர்வீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |