சிம்புவும் நயன்தாரவும் சேர்ந்து சூட்டிங்கில் இதைத்தான் செய்தார்கள்: பல நாள் உண்மைகளை உடைத்த பிரபலம்!
நடிகர் சிம்புவும் நயன்தாராவும் சேர்ந்து படப்படிப்பில் அடித்த அரட்டைகளை பற்றி கூறியிருக்கிறார் பிரபல தயாரிப்பாளரான பி.எல்.தேனப்பன்.
நடிகர் சிம்பு
குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, நடிகர், கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையை கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றி புகழ் பெற்றவர்.
இவர் முதன்முதலில் 2002ம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நாயகனாக நடித்து தனது திரைப்பயணத்தை தமிழில் தொடங்கினர்.
அதற்கு அடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார். மேலும், இவரின் பேரில் பல சர்ச்சை செய்திகளும் அதிகளவாகவே இருந்து வந்தது.
இவர் நடிக்கும் சில நடிகைகளோடு காதல் வயப்பட்டதாகவும் அவை எதுவுமே சரிவரவில்லை எனவும் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
நயன்தாராவுடன் சில்மிஷம்
இதில் நயன்தாராவடன் அதிக சில்மிஷங்கள் செய்ததாகவும் பி.எல்.தேனப்பன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இது நம்ம ஆளு படப்பிடிப்பின் போது நயன்தாரா சில சில்மிஷங்களை செய்வாராம்.
நயன் மிகவும் நெருக்கமாக பழகக்கூடியவர் என்பதால் ஒரு நாள் இரவு அவரது போனை வாங்கியிருக்கிறார் பி.எல்.தேனப்பன். வாங்கிய நயன் சிம்புவுடன் சேர்ந்து நடிகை கோபிகாவுக்கு ‘ஐ லவ் யூ’ என்ற மெசேஜை போட்டிருக்கிறார்.
மேலும் அனுப்பிய குறுஞ்செய்தியை அழித்தும் விட்டிருக்கின்றனர். மறுநாள் கோபிகா பி.எல்.தேனப்பனிடம் ‘ஏன் சார் அப்படி ஒரு மெசேஜை அனுப்பினீர்கள்?’என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அவர் சத்தியமாக நான் இல்லை என்று சொல்லி யோசித்து பார்த்தாராம். அப்போது தான் இரவு சிம்புவும் நயனும் சேர்ந்து தன் போனில் இருந்து அனுப்பியதை தெரிந்து கொண்டாராம்.
இப்படி நயன் அடிக்கடி இந்த மாதிரி சேட்டைகள் எல்லாம் செய்வாராம். இதை ஒரு பேட்டியின் போது பி.எல்.தேனப்பன் கூறினார்.