கறுத்த வெள்ளியை புதுசு போல மாற்றணுமா? டீ தூளில் இதை சேர்த்தால் போதும்
கறுத்த வெள்ளி நகைகளை எப்படி வீட்டிலேயே பளபளவென்று மாற்றலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளி நகைகளை புதுசு போல மாற்றுதல்
காற்றில் உள்ள கந்தக வாயுவும், நமது உடலில் சுரக்கும் எண்ணெய்களும் வெள்ளியுடன் வினைபுரிந்து சில்வர் சல்பைடு (Silver Sulfide) என்ற கருமையான படலத்தை உருவாக்குகின்றன.
வெள்ளி நகைகள் காற்றில் கறுப்பாக மாறுவது இயல்பானது தான். இப்படி கறுப்பாகுவதால் வெள்ளி தன் பளபளப்பை இழந்து கறுப்பு போல காட்சியளிக்கும்.
இதை வீட்டில் டீதூள் வைத்து வெள்ளையாக பளபளப்பாக மாற்ற முடியும். இதற்கு
1. ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
2. அதில் நகைகள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். (நகை போட கூடாது)
3. தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது டீதூள் சேர்க்கவும்.
4.பின்னர் தேயிலைத் தூள் தண்ணீரில் கலந்து நிறம் மாறியதும், அரை டீஸ்பூன் ஷாம்புவை ஊற்றி நன்றாகக் கலக்கி இரண்டு நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
5. இந்த கலவையில் சுத்தம் செய்ய வேண்டிய நகைகளை போட வேண்டும்.
6.நகைகளை மூன்று நிமிடங்களுக்குக் கொதிக்க விட வேண்டும்.
7.பின்னர் இந்த கொதிக்கும் கலவையில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவைச் சேர்க்கவும்.
8. கலவை பொங்கி வந்ததும் ஒரு கிண்ணத்தில் வடிகட்டி, நகைகளை மட்டும் தனியாக எடுக்கவும்.
9. பின்னர் வடிகட்டிய நீரில் நகைகளை மீண்டும் போட்டு மூன்று நிமிடம் ஊற விட வேண்டும்.
10.இதன் பின்னர் நகைகளில் அரை டீஸ்பூன் ஷாம்புவை தடவி ஒரு மென்மையான பிரஷ்ஷை பயன்படுத்தி தேய்க்க வேண்டும்.
11இறுதியாக தேய்த்த நகைகளை தண்ணீரில் நன்றாகக் கழுவி துணியால் மெதுவாக துடைத்து உலர வைக்க வேண்டும். இப்போது நகை புதிது போல மாறி இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |