தர்பூசணி பழத்தில் உப்பு தூவி சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த ஆபத்து உறுதி!
கோடை காலம் ஆரம்பித்து விடடால் கூடவே தர்பூசணி பழத்தின் வருகையும் ஆரம்பித்துவிடும். அதிக அளவு நீர்ச்சத்துடனும், மிகுந்த சுவையுடனும் இருக்கும் தர்பூசணி நம் உடலை போதுமான அளவு நீர் சத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் உடலுக்கு குளிர்ச்சியும் அளிப்பதால் வெளியிடங்களுக்கு செல்லும்போது முடிந்த அளவு தர்ப்பூசணி பழத்தை சாப்பிடுவது சிறந்தது.
சிலருக்கு தர்பூசணியுடன் உப்பு தூவி சாப்பிடும் பழக்கம் இருக்கும். இப்ப சாப்பிடுவதல் உடல் ஆரோக்கியத்தில் எவ்வாறான பாதக விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
ஆபத்தாக பக்கவிளைவுகள்
தர்பூசணியுடன் உப்பு தூவி சாப்பிடுவதால், வாயு, குமட்டல் மற்றும் அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காரணம் உப்பு, உடலில் நீர் தக்கவைப்பை அதிகரிக்கிறது, இது வீக்கம் மற்றும் பிற பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
கோடைக் காலத்தில் உடலில் இருந்து அதிக அளவில் வியர்வை வெளியேறுவதால், நீரிழப்பு அதிகமாக இருக்கும். இதனை ஈடு செய்ய அதிகளவில் நீர் அருந்த வேண்டும். வியர்வை மூலம் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் குறைகின்றன. எனவே, உப்பு அதன் குறைபாட்டை நிவர்த்தி செய்ய உதவுகின்றது. ஆனால் உப்பை அதிகமாக உட்கொள்வதும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
குறிப்பாக அதிக உப்பு சாப்பிடுவது உயர் இரத்த அழுத்த அபாயத்துடன் தொடர்புடையது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.இது இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. மேலும் அதிக உப்பு சாப்பிடுவதால் சிறுசீரக பாதிப்பு ஏற்படும் அபாயமும் அதிகம் காணப்படுகின்றது.
ஏற்கனவே, சிறுநீரக பிரச்சினை இருப்பவர்கள் இவ்வாறு இவ்வாறு பழங்களில் உப்பு சேர்த்து சாப்பிடும் பழக்கம் கொண்டவராக இருந்தால், சிறுநீரக பாதிப்பு மேலும் மோசடையும் அபாயம் காணப்படுகின்றது.
தர்பூசணியில் பொட்டாசியம் உள்ளது, இது ஒரு எலக்ட்ரோலைட் ஆகும், அதே நேரத்தில் உப்பில் சோடியம் உள்ளது, இது பொட்டாசியத்துடன் சேர்ந்து உடலில் திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது எனவும் சில மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தர்பூசணியுடன் உப்பை சேர்த்து சாப்பிடும் பழக்கம் தொடர்பில் ஒவ்வொரு மருத்துவர்களுக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் குறைந்த அளவு உப்பு உட்கொள்வது தான் ஆரோக்கியத்துக்கு சிறந்தது என வலியுறுத்துகின்றனர்.
எனவே, தர்பூசணியுடன் உப்பை சேர்த்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் அதை தவிர்த்துக்கொள்வது நல்லது அல்லது அதிகமாக உப்பை எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் இது குறித்து மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |