நான் அவருடன் நடிக்க மாட்டேன்... இயக்குநரிடம் நோ சொன்ன சில்க்
கவர்ச்சி கன்னி என்றால் இன்று வரையில் நம் அனைவருக்கும் கண்முன் வந்து நிற்பது சில்க் ஸ்மிதா தான். அவரது வசீகர கண்களால் அனைவரையும் கவர்ந்தவர்.
அதுமாத்திரமில்லாமல் 70,80களில் பல படங்களில் நடித்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்டவர். ஹீரோயினாக ஜொலிக்க முடியாவிட்டாலும், ரிஜினி, கமல் போன்ற ஹீரோக்களின் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ளார்.
அதேநேரம் பல ஹீரோக்களுடன் நடித்த சில்க் ஸ்மிதா, ஒரு ஹீரோவுடன் மாத்திரம் நடிக்கமாட்டேன் என கூறியுள்ளார். அது வேறு யாருமில்லை, நடிகர் சத்யராஜ் தான்.
சத்யராஜ் அவர்கள் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் 'கனம் கோர்ட்டார் அவர்களே'. இந்தத் திரைப்படத்தில் சத்யராஜூடன் இவரை நடிக்கும்படி இயக்குநர் கூறியதற்கு“என்னால் அவருடன் நடிக்க முடியாது. அவரது முகத்தைப் பாருங்கள்..உயரத்தைப் பாருங்கள்...அவருடனெல்லாம் நான் நடிக்க மாட்டேன்” எனக் கூறிவிட்டாராம்.
பின்னர் சத்தியராஜின் குடும்பப் பின்னணி உள்ளிட்ட பல விடயங்களைக் கூறியே இயக்குநர் சில்க் ஸ்மிதாவை சம்மதிக்க வைத்துள்ளார்.
படப்பிடிப்பில் சத்யராஜ் பேசும் விதம் சில்க் ஸ்மிதாவுக்கு பிடித்துப்போகவே, அதன் பின்பு அவருடன் பல படங்களில் நடித்தார்.
image - dnext