சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது...ஹீரோயின் யார் தெரியுமா?
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக மாற உள்ளதாக புதிய அறிவிப்பொன்று வெளியாகி அணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை சில்க் ஸ்மிதா
தமிழ் திரையுலகில் இன்றளவும் யாராலும் நிரப்ப முடியாத இடத்தை பிடித்த நடிகை, சில்க் ஸ்மிதா. 80களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் இவர்.
ஆந்திராவில் பிறந்து வளர்ந்த இவர், நடிகை ஒருவரிடம் துணை மேக்-அப் கலைஞராக இருந்து, மெல்ல மெல்ல திரையுலகிற்குள் நுழைந்தார்.
இவருக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி, இவரது வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு.. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றினை இதற்கு முன்னரே பலர் படமாக எடுக்க முயற்சித்தனர்.
ஆனால், ஏதோ சில காரணங்களினால் அந்த முயற்சிகள் யாவும் பாதியில் முடிந்து போனது. இந்த நிலையில், தற்போது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக மாற உள்ளதாக புதிய அறிவிப்ப ஒன்று வெளியாகியுள்ளது. இதை, சென்னையை சேர்ந்த புதுமுக இயக்குநர ஜெயராம் என்பவர் இயக்க இருக்கிறார்.
ஹீரோயின் யார்..?
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது கதாப்பாத்திரத்தில் சந்திரிகா ரவி நடிக்கிறார். இவரும் கவர்ச்சி கதாப்பாத்திரங்கள் சிலவற்றில் நடித்துள்ளார்.
சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் “Untold Story” என்ற வாசகம் இடம் பெற்றிருக்கிறது. இப்படம், அடுத்த வருடம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |