வீட்டில் பட்டுப்புடவையை துவைப்பது எப்படி? வருடக்கணக்கில் புதிது போல தெரியனுமா? அருமையான ஐடியா
பட்டு புடவை என்றாலே விலை அதிகமாகத்தான் இருக்கும்.
அதை மற்ற புடவைகளைப் போல் அல்லாமல் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
அதனால் இந்த பயனுள்ள குறிப்பை முழுமையாக படித்து பலன் பெறுங்கள்.

குளிக்கும் போது அதை செய்கிறீர்களா? எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
வெளியில் உடுத்திவிட்டு வந்ததும் அவிழ்த்து சுற்றி வைக்காமல் விரித்த வாக்கில் காற்றாட விடுங்கள்.
அதில் உள்ள வியர்வை துர்நாற்றம் போக வேண்டும். பின் அதை மடித்து அப்படியே வெளியே லாண்டரியில் கொடுத்து துவைத்துக்கொள்ளுங்கள்.
வீட்டில் உங்களுக்கு துவைக்கும் முறை தெரிந்தால் துவைக்கலாம். இல்லையென்னில் கடையில் கொடுப்பதே நல்லது. ஏனெனில் வீட்டில் துவைத்தால் அதன் ஜரிகை சேதாரமாகலாம். அதேபோல் வாஷிங் மெஷினில் போடுவதும் தவறான செயல்.

பட்டுப்புடவையை மற்ற துணிகளோடு சகஜமாக மடித்து வைக்கக் கூடாது.
அதை மடித்து சல்லடை போல் மெலிதாக இருக்கக் கூடிய மஸ்லின் துணியில் சுற்றி வைக்கவும்.
மஸ்லின் பை இருந்தாலும் அதற்குள் வைத்து பாதுகாக்க வேண்டும். பீரோவில் மட்டுமே வைக்க வேண்டும். அடிக்கடி எடுத்து மாற்றி மாற்றி மடித்து வைக்க வேண்டும். ஒரே மடிப்பில் நீண்ட நாட்கள் இருந்தால் மடிப்புகள் அப்படியே படிந்துவிடும்.
வீட்டில் பட்டுப்புடவையை துவைப்பது எப்படி?
பட்டு புடவைகளை துவைக்கும் போது ரசாயனம் கலந்த சோப்பு மற்றும் வாஷிங் பவுடர்களை பயன்படுத்த கூடாது.
பட்டு புடவையை சுத்தமான நீரில் அலசினாலே போதும்.
இவ்வாறு நாம் பட்டு புடவையை சுத்தமான நீரில் அலசினால் மிகவும் நல்லது.
வாழ்நாள் முழுவதும் இதய நோய் வராமல் இருக்க வேண்டுமா?
பட்டு புடவையை துவைக்கும் போது பாடர் மற்றும் ஜரிகை பகுதிகளை தனித்தனியாக துவைப்பது மிகவும் நல்லது. பட்டு புடவையை அடித்து துவைக்க கூடாது.
பட்டுப்புடவையை துவைத்த பின்பு பட்டு புடவையை இறுக்கி பிழிதலும் கூடாது.
இவ்வாறு செய்யும் பொது பட்டுபுடவையில் உள்ள சரிகைகள் மிகவும் பாதிப்படையும்.
பட்டு புடவையை வெயிலில் காய வைக்க கூடாது. 3 மணி நேரம் நிழலில் காயவைத்து எடுப்பது போதுமானது.