திடீர் டுவிஸ்ட் : சிம்புவிடம் கதை சொன்ன வெற்றிமாறன் - கடுப்பான தனுஷ்?
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல பிரிவுகளில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். தனுஷ் இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
சிம்புவிடம் கதை சொன்ன வெற்றிமாறன்
இந்நிலையில், “வட சென்னை” படத்தின் படப்பிடிப்பின்போது வெற்றிமாறனை தனுஷ் டார்ச்சர் செய்ததாக தற்போது ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
“வட சென்னை” படத்தில் முதலில் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், கால்ஷீட் நாட்களை கொடுக்கவில்லை. இதனால், படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளது. இதனால், சிம்புவை வைத்து படம் இயக்கலாம் என்று வெற்றி மாறன் முடிவு செய்துள்ளாராம்.
இதனையடுத்து, சிம்புவிடம் ஒரு கதையை கூறி இருக்கிறாராம். எப்படியோ இந்த விஷயம் தனுஷிற்கு தெரிய வந்தது. இதன் பின்னர், சில நாட்களிலேயே தனுஷ் கால்ஷீட் நாட்களை தந்தாராம்.
கடுப்பான வெற்றிமாறன்
இதனால், சிம்புவை வைத்து படம் இயக்குவதை கைவிட்டுவிட்டு “வட சென்னை” படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் வெற்றிமாறன். ஆனால் தனுஷ் படப்பிடிப்புக்கு சரியாக வரவில்லை. திடீரென தனுஷ் வெற்றிமாறனுக்கு போன் செய்து, நான் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். எப்படி இருக்கிறது என்று கூறுங்கள் என்று கூறினாராம்.
இதனால் கடுப்பான வெற்றிமாறன், சார் இங்க ஷூட்டிங் வச்சிருக்கோம். ஆனால், நீங்க ஷூட்டிங் வராம இருக்குறீங்களே?” என்று கேட்டுவிட்டாராம். அதற்கு தனுஷ், ஷூட்டிங் இருக்கட்டும், நாளைக்கு வைத்துக்கொள்வோம் என்று கூறிவிட்டாராம். இப்படி அடிக்கடி தனுஷ், வெற்றிமாறனை கோபமாக்கிவிடுவதாக கூறப்படுகிறது.